இன்றைய ராசி பலன் 01.01.2022
மேஷம் | நலம் |
உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள். | |
ரிஷபம் | சுகம் |
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சிறு சிறு பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெற்றாலும் லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சுகமான நாள். | |
மிதுனம் | ஆதரவு |
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன், பொருள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆதரவு கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள். | |
கடகம் | இன்பம் |
வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். இன்பமான நாள். | |
சிம்மம் | பாசம் |
கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவர் வழியில் அனுகூலமான சூழல் உண்டாகும். பிடிவாத குணத்தை விட்டுவிடுவது நல்லது. எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள். | |
கன்னி | மகிழ்ச்சி |
செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவி கிடைக்கும். பேச்சில் தெளிவும், மனதில் தன்னம்பிக்கையும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். சகோதர, சகோதரி வழியில் நன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். மகிழ்ச்சியான நாள். | |
துலாம் | அமைதி |
குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் அமைதியும், நிம்மதியும் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். அமைதி வேண்டிய நாள். | |
விருச்சிகம் | உயர்வு |
திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் காலமாக மாறும். உங்கள் கனிவான பேச்சி பலரையும் வசிய படுத்தி உங்கள் தொழில் முறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். புது தொழில் தொடங்க சரியான தருணம், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது நாள் வரை மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு விலகி பதவி உயர்வு கிடைக்கும் . | |
தனுசு | லாபம் |
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். வாழ்க்கைத்துணைவர் வழியில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். மனதில் இருந்துவந்த கவலை நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். லாபம் நிறைந்த நாள். | |
மகரம் | நற்செயல் |
வெளிவட்டாரத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கட்டுப்பாடு வேண்டும். இழுபறியாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலைகள் காணப்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நன்மை நிறைந்த நாள். | |
கும்பம் | பணிவு |
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். பணிவு வேண்டிய நாள். | |
மீனம் | தனம் |
உத்தியோகத்தில் நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வரவுகள் மேம்படும் நாள். |