இன்றைய ராசி பலன் 05.01.2022

மேஷம்சாந்தம்
புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குடும்ப பெரியோர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. அமைதி நிறைந்த நாள்.
ரிஷபம்மேன்மை
புதிய வியாபார நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
மிதுனம்விவேகம்
உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சிலரது சந்திப்புகள் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். விவேகம் வேண்டிய நாள்.
கடகம்போட்டி
மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.
சிம்மம்சாதனை
வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். பத்திரம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.
கன்னிதேர்ச்சி
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகளும், கலகலப்பான செய்திகளும் கிடைக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உருவாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.
துலாம்ஊக்கம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் புதுவிதமான உத்வேகத்தை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமாக நிறைவடையும். செய்கின்ற பணிகளில் லாபகரமான கண்ணோட்டங்கள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
விருச்சிகம்அமைதி
குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் அமைதியும், நிம்மதியும் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
தனுசுமகிழ்ச்சி
செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவி கிடைக்கும். பேச்சில் தெளிவும், மனதில் தன்னம்பிக்கையும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். சகோதர, சகோதரி வழியில் நன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.
மகரம்ஆர்வம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். வியாபார முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.
கும்பம்ஆதரவு
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன், பொருள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.
உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.  ஆதரவு நிறைந்த நாள்.
மீனம்பாராட்டு
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்கள் நடைபெறுவதில் காலதாமதம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு ஏற்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.