மேஷம் | மகிழ்ச்சி |
| செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவி கிடைக்கும். பேச்சில் தெளிவும், மனதில் தன்னம்பிக்கையும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். சகோதர, சகோதரி வழியில் நன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். மகிழ்ச்சியான நாள். |
ரிஷபம் | பகை |
| புதுவிதமான அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். வியாபாரம் ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். முன்னுரிமை கிடைக்கும் நாள். |
மிதுனம் | சோதனை |
| கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சிறு சிறு பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெற்றாலும் லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சுகமான நாள். |
கடகம் | இன்பம் |
| வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். இன்பமான நாள். |
சிம்மம் | அச்சம் |
| வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். கடன் நிமிர்த்தமாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். அன்பு நிறைந்த நாள். |
கன்னி | பரிவு |
| எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எண்ணிய காரியங்கள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பயணம் நிறைந்த நாள். |
துலாம் | தேர்ச்சி |
| குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகளும், கலகலப்பான செய்திகளும் கிடைக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உருவாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாள். |
விருச்சிகம் | மேன்மை |
| புதிய வியாபார நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள். |
தனுசு | நிம்மதி |
| உத்தியோக பணிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அமைதி வேண்டிய நாள் |
மகரம் | சுபம் |
| கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சிறு சிறு பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெற்றாலும் லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சுகமான நாள். |
கும்பம் | ஏமாற்றம் |
| கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் புதுவிதமான உத்வேகத்தை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமாக நிறைவடையும். செய்கின்ற பணிகளில் லாபகரமான கண்ணோட்டங்கள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். தன்னம்பிக்கை நிறைந்த நாள். |
மீனம் | ஜெயம் |
| வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. எண்ணம் ஈடேறும் நாள். |