இன்றைய ராசி பலன் 23.12.2021

மேஷம் – அனுகூலம்

செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளின் போக்கில் மாற்றமும், அனுபவ அறிவும் வெளிப்படும். அனுகூலமான நாள்.

ரிஷபம் – மறதி

எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வாக்குவன்மையின் மூலம் ஆதாயமடைவீர்கள். உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.

மிதுனம் – ஆசை

நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை வெற்றி கொள்வீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் அதிகரிக்கும். ஆசைகள் நிறைவேறும் நாள்.

கடகம் – நிம்மதி

உத்தியோக பணிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அமைதி வேண்டிய நாள்.

சிம்மம் – வெற்றி

எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

கன்னி – தோல்வி

உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். போட்டிகள் நிறைந்த நாள்.

துலாம் – அமைதி

எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். உறவினர்களின் வழியில் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுப்பணிகளில் பொறுப்புகள் தேடி வரும். அமைதி நிறைந்த நாள்.

விருச்சிகம் – சுகம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சிறு சிறு பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெற்றாலும் லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோக பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சுகமான நாள்.

தனுசு – பயணம்

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எண்ணிய காரியங்கள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பயணம் நிறைந்த நாள்.

மகரம் – நலம்

உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

கும்பம் – முயற்சி

பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல் காணப்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குழந்தைகளின் உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

மீனம் – லாபம்

குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் அமைதியும், நிம்மதியும் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.