இன்றைய ராசி பலன் 25.12.2021

மேஷம் – சந்தோசம்
வெளியூர் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம் – பொருமை
ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். பெருமை நிறைந்த நாள்.
மிதுனம் – நேர்மை
புதுவிதமான அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். வியாபாரம் ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். முன்னுரிமை கிடைக்கும் நாள்.
கடகம் – ஓய்வு
சகோதரர்களின் வழியில் ஒற்றுமை உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வாகனம் தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
சிம்மம் – ஈகை
மனதில் ஏற்படும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பமும், கோபமும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். தகவல் தொடர்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.
கன்னி – சினம்
உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் சம்பந்தமான புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், கற்பனைகளும் உண்டாகும். வரவுக்கேற்ப விரயங்களும் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.
துலாம் – தனவிருத்தி
கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். புதிய வீடு மற்றும் நிலம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். அபிவிருத்தியான நாள்.
விருச்சிகம் – அலைச்சல்
தொழில் சார்ந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களில் நன்மை உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
தனுசு – கவனம்
சமூகம் தொடர்பான பணிகளில் அனுபவம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். கவனம் வேண்டிய நாள்.
மகரம் – 
தோல்வி
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். முக்கியமான பணிகளை செய்து முடிப்பதில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வழக்கு சார்ந்த பணிகளில் மாற்றமான சூழல் காணப்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
கும்பம் – 
அன்பு
வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். கடன் நிமிர்த்தமாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். அன்பு நிறைந்த நாள்.
மீனம் – 
வாழ்வு
வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான எண்ணங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். விருப்பமானவர்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வளமான நாள்.