கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பொறாமையாகதான் இருக்கிறது பார்க்கும்போது, குழந்தையின் சிரிப்பு..


அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கே, பல இடங்களில் அரசாங்கம் சரியில்லை என்று உச்சரிக்கபடுகிறது..


விலைவாசி உயர்வை எதிர்த்து போராடாத ஒரே துறை– TASMAC..


மாடுகளை கண்காட்சியில் வைத்து பார்க்கும் அளவிற்கு வந்து விட்டது நம் தலைமுறை..இது என்ன வளர்ச்சியா..??


எல்லாப் பொருட்களின் விலைவாசியும் மாதம் ஒரு முறை கூட்டிட்டு போகுது, சம்பளம் மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை தான் கூட்டப்படுகிறது..


மனைவியின் கர்ப்ப காலத்தில் குறைக்க பட்ட இரு சக்கர வாகனப் பயணத்தின் வேகம் பின்னர் எக்காலத்திலும் கூட்டப்படாமலே போய் விடுகிறது..


All are fare in their own life..வாழ்க்கையில் சரி, தவறு என்று எதுவும் இல்லை..


அரசு அதிகாரிகளின் தனி மனித ஒழுக்கமின்மைக்கு கிடைத்த பரிசு இந்த ரூபாய் தாள்கள் ஒழிப்பு..


Sir, என்ன சார் பிரச்சனை..??
பணம் தான் சார் பிரச்சனை..
பணம் இருக்குன்னு பிரச்சனையா..?? இல்லையென பிரச்சனையா..??
இருக்குறவனுக்கு இருக்கேனு பிரச்சனை..இல்லாதவனுக்கு இல்லையேனு பிரச்சனை..
இரண்டு பேருக்குமே பிரச்சனை இருக்குதுள சார்,
அப்புறம் எப்படி பணம் தான் பிரச்சனைனு சொல்றிங்க..


அரசாங்கம் சரியில்லை என பொதுபடையாக சொல்வது 30% அமைச்சர்களையும் 70% அரசு ஊழியர்களை மனதில் வைத்து கொன்டே..


லஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்குவது என்பது, நல்ல பிச்சை பாத்திரம் வாங்கி பிச்சை எடுப்பதற்க்கு சம்ம..


தேங்காய் எண்ணெய் தலைக்கு தெய்பதின் அர்த்தம் தெரியாத எம் உறவுகள் தான் இன்று பேடுகை போக்க பல வழிகள் தேடுகிறார்கள்..


பிள்ளைகளுக்கு அனுபவ பாடம் சொல்லித்தரும் பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விட்டு, லட்சங்கள் பல செலவலித்து பள்ளியில் கற்கும் பாடங்களால் எந்த பயனும் இல்லை..


100
200
300
400
500
600
700
800
900
1000
மேலே கொடுக்கப்பட்ட எண்களை தமிழில் உச்சரித்தவர்களுக்கு நன்றி..


Pollution – அளவிற்கு அதிகமான டீசல் ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கும் RTO-கள் சமுதாயத்தின் முதல் சாபக்கேடு எனில் சொகுசாக பயன்படுத்தும் நாம் இரண்டு..
முயன்றளவு அரசு பேருந்துகளை பயன்படுத்துவோம்.. இன்னோரு டில்லி நமக்கு வேண்டாம்..


100 ரூபாய்க்கு படு மங்களகரமாகவும்,
இலவச தரிசனத்திற்கு படு மங்களாகவும் காட்சி தருகிறார் கடவுள்..
யாரோ சொன்னது இன்று கோவில் வரிசையில் நினைவிற்கு வந்தது..


பணம் வந்தா பிரச்சனைகள் சேர்ந்தே வருது,
பிரச்சனைகள் வேண்டாமென பணத்தை விட்டு கொடுத்துவிட்டேன்..


பால்வாடி அரசு ஊழியர்களின் அலட்சியப் போக்கே இத்துனை “play school” உருவாக அடிப்படை காரணம்..


எல்லோரும் கும்பிடுகிறோம்,
எங்கே என்றுதான் தெரியவில்லை..
கடவுள், இருந்தால் நல்லாருக்கும்ல..


காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்க சாலை சாத்தியம் என்றால்.
அதை ஒட்டி ஒரு கால்வாய் அமைத்து நீர் வழித்தடம் அமைப்பது சாத்தியம் அன்றே..


அம்பானியும், அதானியும் எப்போது விவசாயம் பண்ண ஆரம்பிக்கிறாங்களோ அப்ப தான் இந்திய ஆறுகளை இணைக்க முடிவு எடுக்க படும் போல தொன்றுகிறது..


மகிழ்ச்சி..கெளுத்தும் வெயில், ஜன்னலோற இருக்கை,
புன்னகையுடன் அரசு பேருந்து நடத்துநர்..


முறன்..என் அப்பன் கட்டிய வீட்டினுள் நான் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க ஆசை படுகிறேன், நான் கட்டிய வீட்டிற்கு வெளியே அமர்ந்து காற்று வாங்க என் அப்பா ஆசை படுகிறார்..


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *