பெண் கவிதை
பெண் கவிதை..!
பெண்ணே நீ கலங்காதே!
உன் பக்கத்தின் நாயத்தை
யாருமே பேச, முன் வரவில்லையே!
என வருந்துகிறாயா..?? நீ..
நீ தான் இந்த உலகத்தின் வாசல்
நீ இன்று இந்த உலகத்திற்குள்
யாராவது நுழைய முடியுமா?
உன் அரவணைப்பு இன்றி தான்
இந்த பூமியில் யாரும் வாழ முடியுமா?
உன்னை தன் சுயநலத்திற்காக
போற்றுபவரும் உண்டு,
உன்னை தூற்றுபவரும் உண்டு
நீ.. எதற்கும் கலங்காதே!
எல்லோரும், உன்னை புரிந்து கொள்ளும் காலம்
வெகு விரைவில்..
நீ தோல்வியை கண்டு ஓடுபவள் கிடையாது
எதிர்கொண்டு நடப்பவள் நீ..
நீ யாருடைய ஆணவத்திற்கும் அடிபணிபவள் அல்ல!
அன்பிற்கு மட்டும் அடிபணிபவள் நீ..
நீ யாருடைய துணையும் இன்றி
வாழ்ந்து காட்டுவாய்!
ஆனால், உன் துணை இன்றி
யாருமே.. இங்கே வாழ முடியுமா..?
இந்த பூமியில் உனக்கு கிடைக்கும்
பட்டங்கள் ஏராளம்..
குழந்தை பெற்றுக் கொடுக்கவில்லை என்றால்?
மலடி என்ற பட்டம்,
கணவனுக்கு பயந்து வாழவில்லை என்றால்?
அடங்காதவள் என்ற பட்டம்
நீ முன்னேறிக் கொண்டே! சென்றால்
உன்னை அடைத்து வைக்க ஒரு பட்டம்
இதுபோல ஏராளம்..
உனக்குக் கொடுக்கும் பட்டங்கள்.
எதையும் கண்டு கலங்காதே!
பெண்ணே…
உன்னை காயப்படுத்தும்
மனதிற்கு தெரியுமா?
நீயும் ஒரு உயிர்தான் என்று..
புத்தகம் சுமக்கும் வயதில்
குடும்ப பாரத்தை சுமக்க
பழகிக் கொண்டவள் நீ..
பூ.. போல மலர்ந்து சிரிக்கும் வயதில்
ஆண் என்ற ஆதிக்கத்திற்குள்
மாட்டிக் கொண்டவள் நீ..
எங்கும், எதிலும் உன்னை பாதுகாக்க..
காலம் காலமாக
நீ ஓடிக்கொண்டே தானே..!
இருக்கிறாய்..
பூவே.. நீ பெண்ணாக பிறந்து விட்டோமே!
என வருந்தும் நிமிடங்கள்
ஏராளம் அல்லவா..??
நீ வருந்தாதே..
உனக்கு எதையும் தாங்கும்
மன உறுதியை கொண்டு
இருப்பதால் தான், இந்த
பூமியின் பாரம் உன் மேல் இருக்கிறது.
எத்தனையோ! உன் ஆசைகளை மறந்து,
உன் எண்ணங்களை துறந்து..
தன் சுற்று சூழலுக்கேற்ப
உன்னை நீ மாற்றிக் கொண்டு தானே!
வாழ்கிறாய்..
தாய் தந்தை சொன்ன ஒரே காரணத்திற்காக
முன்பின் அறியாதவரையும்
உன் துணையாக ஏற்றுக் கொண்டாய்..!
அதனால், வரும் வலிகளையும்
நீ தாங்கிக் கொண்டாய்!
இனிவரும் காலங்கள்
அதுபோல இருக்காது பெண்ணே..!
உன் தியாகங்களும், சாதனைகளும்
வெளியில் வந்த வண்ணம் தான்
இருக்க போகிறது..!
இரும்பு மனம் கொண்ட இனியவளே
நாளை உன் நாள் பிறக்கும்
கலங்காதே..!!