Perumal Pottrigal

பெருமாள் 108 போற்றிகள் | Perumal 108 Pottrikal

பெருமாள் 108 போற்றிகள் | புரட்டாசி சிறப்பு பாடல் | தமிழ் பாடல்வரிகள்

காக்கும் கடவுளே போற்றி
கருணை கடலே போற்றி
கலியுக வரதனே போற்றி
கார்மேக வண்ணா போற்றி
கேசவ மூர்த்தியே போற்றி
கீர்த்தி வாசனே போற்றி
கோவிந்த ராசனே போற்றி
கோகுல மைந்தா போற்றி
ஏழுமலை வாழும் மலையப்ப சாமியே போற்றி போற்றி

பாற்கடல் வாசா போற்றி
பரந்தாமா போற்றி
பாம்பணை கொண்டவா போற்றி
பார்த்தசாரதியே போற்றி
பத்மாவதி துணைவன் போற்றி
பாஞ்சாலிக்கருளியவா போற்றி
பரமபத ப்ரியனே போற்றி
பக்தவத்சலா போற்றி
வேங்கடநாதா கோவிந்தா போற்றி போற்றி

ஆழ்வார்களின் நாயகனே போற்றி
அரங்க நாதனே போற்றி
அவதார மூர்த்தியே போற்றி
அனந்த ராமனே போற்றி
அலைமகள் துணைவனே போற்றி
அகந்தை அழிப்பாய் போற்றி
அனைத்துலகும் ஆள்பவனே போற்றி
ஆனந்த வடிவுடையோனே போற்றி
சீனிவாச பெருமாளே போற்றி போற்றி

திருமலை ராஜனே போற்றி
திருமகள் நேசனே போற்றி
திருமாலே போற்றி
திவ்ய மூர்த்தியே போற்றி
தீவினை களைவாய் போற்றி
தீங்கனிச் சுவையே போற்றி
துளசி ராமனே போற்றி
துணைவரும் தெய்வமே போற்றி
வைகுண்ட வாசனே போற்றி போற்றி

வாமன ரூபனே போற்றி
வருவோரை காப்பாய் போற்றி
வறுமை நிலை தீர்ப்பாய் போற்றி
வசீகரனே போற்றி
வேத மூர்த்தியே போற்றி
வெற்றிகள் தருவாய் போற்றி
வேற்றுமை அற்றவா போற்றி
வினைதீர்க்கும் வள்ளலே போற்றி
உலகளந்த பெருமாளே போற்றி போற்றி

நரசிம்ம மூர்த்தியே போற்றி
நாராயணனே போற்றி
நலம் தரும் நற்கதியே போற்றி
நல்லோரை காப்பவனே போற்றி
நம்பியோர்க்கு அருள்வாய் போற்றி
நவ திருப்பதி நாயகனே போற்றி
நல்வழி காட்டுவாய் போற்றி
நட்புக்கு இலக்கணமே போற்றி
தேரோட்டியாய் வந்த தெய்வமே போற்றி போற்றி

தாமரைக் கண்ணா போற்றி
தாமோதரனே போற்றி
தயாபரியே போற்றி
தத்துவப் பொருளே போற்றி
தடுத்தாட்கொள்வாய் போற்றி
தாள் பணிவோம் போற்றி
தடைகளை அகற்றுவாய் போற்றி
தக்கத் துணையே போற்றி
தன்னிகரில்லா பெருமாளே போற்றி போற்றி

மச்ச ரூபனே போற்றி
மதுசூதனா போற்றி
மாயவன் பதமே போற்றி
மாலவன் வடிவே போற்றி
மாதவன் திருவே போற்றி
மஹாலக்ஷ்மி துணைவனே போற்றி
முருகனின் மாமனே போற்றி
முக்தியினைத் தருவாய் போற்றி
முன்வினைத் தீர்க்கும் முகுந்தனே போற்றி போற்றி

ஆமை வடிவெடுத்தாய் போற்றி
ஆனந்த வாழ்வளிப்பாய் போற்றி
அசுரரை அழித்தாய் போற்றி
அழகிய நெடியவனே போற்றி
ஆயர்பாடியில் வளர்ந்தாய் போற்றி
ஆற்றலைத் தருவாய் போற்றி
அல்லலை நீக்குவாய் போற்றி
அகிலத்தை காப்பவனே போற்றி
அலர்மேல்மங்கை நாயகனே போற்றி போற்றி

நீலநிறக் கண்ணனே போற்றி
நீதியை நிலை நாட்டுவாய் போற்றி
நினைத்ததை தருவாய் போற்றி
நிழலாக இருப்பாய் போற்றி
நெஞ்சத்தில் அமர்ந்தாய் போற்றி
நெறி காக்க வருவாய் போற்றி
நின்ற வடிவமே போற்றி
நியாயத்தைக் காப்பவனே போற்றி
நீ இருக்கும் திசை நோக்கி
வணங்குவோம் போற்றி போற்றி

சங்க நாதமே போற்றி
சக்ரதாரியே போற்றி
சஞ்சலம் போக்குவாய் போற்றி
சாந்தஸ்வரூபியே போற்றி
சந்தான கிருஷ்ணனே போற்றி
சங்கீத ப்ரியனே போற்றி
சத்திய மூர்த்தியே போற்றி
சமத்துவ கீர்த்தியே போற்றி
ஜென்ம பாவம் போக்கும் வேங்கடவா போற்றி போற்றி

பல்லாண்டு பாடினோம் போற்றி
பாசுரம் கேட்பவனே போற்றி
பால் மனம் கொண்டவா போற்றி
பாவங்கள் நீக்குவாய் போற்றி
பக்தரின் காவலனே போற்றி
பஞ்சம் பசி அகற்றுவாய் போற்றி
ஏழுமலை எழிலே போற்றி
எல்லோரையும் காப்பவனே போற்றி
என்றும் இனி சரண் நாங்கள் போற்றி போற்றி