Rasi Palan 31.01.2022

இன்றைய ராசி பலன் 31.01.2022

மேஷம்: துணிவு
வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. எண்ணம் ஈடேறும் நாள்.
ராசியான திசை: வடக்கு.
ராசியான எண்: 1
ராசியான நிறம்: சிவப்பு நிறம்.
அஸ்வினி நட்சத்திர இன்றைய பலன்: அனுகூலமான நாள்.
பரணி நட்சத்திர இன்றைய பலன்: கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கிருத்திகை நட்சத்திர இன்றைய பலன்: உதவி கிடைக்கும்.
ரிஷபம்: பக்தி
மனதில் இருந்துவந்த சோர்வுகள் படிப்படியாக குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். நிர்வாக பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பக்தி மேம்படும் நாள்.
ராசியான திசை: வடகிழக்கு
ராசியான எண்: 4
ராசியான நிறம்: இளநீலம்.
கிருத்திகை நட்சத்திர இன்றைய பலன்: சோர்வுகள் நீங்கும்.
ரோகிணி நட்சத்திர இன்றைய பலன்: சிந்தனைகள் மேம்படும்.
மிருகசீரிஷம் நட்சத்திர இன்றைய பலன்: மந்தத்தன்மை குறையும்.
மிதுனம்: நட்பு
முக்கியமான முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். கல்வி சார்ந்த பணிகளில் திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் தவறிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அறிமுகம் நிறைந்த நாள்.
ராசியான திசை: வடக்கு.
ராசியான எண்: 8
ராசியான நிறம்: பொன் நிறம்.
மிருகசீரிஷம் நட்சத்திர இன்றைய பலன்: மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை நட்சத்திர இன்றைய பலன்: ஆர்வம் அதிகரிக்கும்.
புனர்பூசம் நட்சத்திர இன்றைய பலன்: முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்: நலம்
உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
ராசியான திசை: தெற்கு.
ராசியான எண்: 2
ராசியான நிறம்: இளம் பச்சை.
புனர்பூசம் நட்சத்திர இன்றைய பலன்: மகிழ்ச்சியான நாள்.
பூசம் நட்சத்திர இன்றைய பலன்: சிந்தனைகள் மேம்படும்.
ஆயில்யம் நட்சத்திர இன்றைய பலன்: மாற்றம் உண்டாகும்.
சிம்மம்: தனம்
உத்தியோகத்தில் நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வாக்குச்சாதுரியத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் அமையும். வரவுகள் மேம்படும் நாள்.
ராசியான திசை: வடமேற்கு.
ராசியான எண்: 8
ராசியான நிறம்: இளநீலம்.
மகம் நட்சத்திர இன்றைய பலன்: கலகலப்பான நாள்.
பூரம் நட்சத்திர இன்றைய பலன்: பொருளாதாரம் மேம்படும்.
உத்திரம் நட்சத்திர இன்றைய பலன்: முதலீடுகள் அதிகரிக்கும்.
கன்னி: இன்பம்
வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்காலம் நிமிர்த்தமான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் கற்பனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களிடம் கவனத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியம் தொடர்பான முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். இன்பமான நாள்.
ராசியான திசை: வடகிழக்கு.
ராசியான எண்: 9
ராசியான நிறம்: பிங்க் நிறம்.
உத்திரம் நட்சத்திர இன்றைய பலன்: கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அஸ்தம் நட்சத்திர இன்றைய பலன்: வெற்றி கிடைக்கும்.
சித்திரை நட்சத்திர இன்றைய பலன்: விருப்பங்கள் நிறைவேறும்.
துலாம்: போட்டி
மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நன்மை ஏற்படும். மனதில் ஆன்மிக நாட்டம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். எந்தவொரு காரியத்தையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் தனவரவை மேம்படுத்துவதற்கான உதவி கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.
ராசியான திசை: வடக்கு.
ராசியான எண்: 9
ராசியான நிறம்: ஆரஞ்சு நிறம்.
சித்திரை நட்சத்திர இன்றைய பலன்: ஆதரவு கிடைக்கும்.
சுவாதி நட்சத்திர இன்றைய பலன்: கருத்து வேறுபாடுகள் குறையும்.
விசாகம் நட்சத்திர இன்றைய பலன்: நன்மை ஏற்படும்.
விருச்சிகம்: அமைதி
குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் அமைதியும், நிம்மதியும் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடம் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வாகனப் பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும். எண்ணம் மற்றும் தோற்றங்களில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான புரிதல் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். அமைதி வேண்டிய நாள்.
ராசியான திசை: தென்மேற்கு.
ராசியான எண்: 8
ராசியான நிறம்: நீலநிறம்.
விசாகம் நட்சத்திர இன்றைய பலன்: பொறுப்புகள் குறையும்.
அனுஷம் நட்சத்திர இன்றைய பலன்: பயணங்கள் கைகூடும்.
கேட்டை நட்சத்திர இன்றைய பலன்: புரிதல் ஏற்படும்.
தனுசு: செலவு
நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பேச்சுவன்மையின் மூலம் லாபம் அடைவீர்கள். நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணியில் எதிர்பார்த்த மாற்றங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.
ராசியான திசை: வடக்கு.
ராசியான எண்: 8
ராசியான நிறம்: வெள்ளை நிறம்.
மூலம் நட்சத்திர இன்றைய பலன்: மாற்றமான நாள்.
பூராடம் நட்சத்திர இன்றைய பலன்: ஈடுபாடு அதிகரிக்கும்.
உத்திராடம் நட்சத்திர இன்றைய பலன்: மந்தத்தன்மை குறையும்.
மகரம்: உறுதி
உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பண வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். தன்னம்பிக்கையான நாள்.
ராசியான திசை: வடகிழக்கு.
ராசியான எண்: 5
ராசியான நிறம்: இளஞ்சிவப்பு.
உத்திராடம் நட்சத்திர இன்றைய பலன்: மாற்றம் உண்டாகும்.
திருவோணம் நட்சத்திர இன்றைய பலன்: ஒத்துழைப்பு கிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திர இன்றைய பலன்: முன்னேற்றமான நாள்.
கும்பம்: சுகம்
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சிறு சிறு பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உறவினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். கூட்டு வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். சொத்துக்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சுகமான நாள்.
ராசியான திசை: வடகிழக்கு.
ராசியான எண்: 4
ராசியான நிறம்: இளநீலம்.
அவிட்டம் நட்சத்திர இன்றைய பலன்: தெளிவு பிறக்கும்.
சதயம் நட்சத்திர இன்றைய பலன்: ஆர்வம் அதிகரிக்கும்.
பூரட்டாதி நட்சத்திர இன்றைய பலன்: ஒத்துழைப்பு மேம்படும்.
மீனம்: ஆக்கம்
உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சிறு மற்றும் குறுந்தொழில்களில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும்.  மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆக்கம் நிறைந்த நாள்.
ராசியான திசை: மேற்கு.
ராசியான எண்: 9
ராசியான நிறம்: மஞ்சள் நிறம்.
பூரட்டாதி நட்சத்திர இன்றைய பலன்: ஒற்றுமை மேம்படும்.
உத்திரட்டாதி நட்சத்திர இன்றைய பலன்: ஆர்வம் அதிகரிக்கும்.
ரேவதி நட்சத்திர இன்றைய பலன்: அனுபவம் மேம்படும்.