வருவான் வடிவேலன்

வருவான் வடிவேலன்
தணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்
நினைத்தால் வருவான் வடிவேலன் (வருவான்……

சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்
அவள் செங்கனி வாயிதழை நனைக்கின்றவன் (சிரித்துக்…..
இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன்
அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன் (ஆஆஆஆஆஆ…இடையினில்…

வருவான் வடிவேலன்
தணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா

அடியவர் கேட்ட வரம் அருள்கின்றவன்
என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்
கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன்
சேவல் கொடியனவன் நமக்கு இனியனவன் (கொடியவர்…..

வருவான் வடிவேலன்
தணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்

திருமுருகாற்றுப்படை நான் பாடவா
இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா
திருமுருகாற்றுப்படை நான் பாடவா
இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா
கந்தர் சஷ்டிக் கவசக் கதை பாடவா
அவன் முன் கையேந்தவா வெற்றிக் கடல் நீந்தவா (வருவான்…..

Varuvaan Vadivelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *